அசந்து துாங்கிய இளம்பெண்: 5 சவரன் நகை பறிப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா 29. இவர் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் முன்பக்க கதவை திறந்த நிலையில் வைத்து உறங்கினார்.
அப்போது திடீரென அத்துமீறி வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் சுஷ்மிதா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றார். இது குறித்த புகாரை அடுத்து திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement