பயிற்சி முகாம் நிறைவு விழா
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு மற்றும் மத்திய அரசின் புதுமையாக்கம் பிரிவு சார்பில் தொழில் முனைவோர் மாணவர் மேம்பாட்டிற்கான முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புதிய வாய்ப்புகளை கண்டறிதல், அதில் ஏற்படும் பிரச்னைகள், தீர்வு காணுதல், மாறுபட்ட வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில் முயற்சிக்கான நிதியை எவ்வாறு திட்டமிடுதல் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவிற்கு முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். அகில இந்திய தொழில்நுட்பக் குழு மேலாளர் ஆனந்த் சுப்புராஜ், வித்துவான் அறக்கட்டளை பயிற்சியாளர் அன்புமணி முன்னிலை வகித்தனர். சிறந்த மாணவர் குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. கணினி துறைத் தலைவர் ஷாலினி நன்றி கூறினார். டீன் ஹரிஹரன், பேராசிரியர் கார்த்திகா ஒருங்கிணைத்தனர்.
மேலும்
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு