மயிலம் தொகுதி தி.மு.க., ஆலோசனை கூட்டம்

மயிலம்: மயிலம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தீவனுாரில் நடந்தது.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவை தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் வரவேற்றார். ஆரணி எம்.பி., தரணி வேந்தன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜாராம், செழியன், அண்ணாதுரை, இளவழுதி, துரை ஊராட்சி தலைவர் செண்டூர் முருகன், ரகுபதி, மயிலம் சேர்மன்கள் யோகேஸ்வரி மணிமாறன், அமுதா ரவிக்குமார் வந்தவாசி சட்டசபை தொகுதி பார்வையாளர் செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement