தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க., குழு கள ஆய்வு

திருப்போரூர், மே 21–

திருப்போரூரில் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க., வின் சிறப்பு குழு நேற்று கள ஆய்வு மேற்கொண்டது.

தமிழக சட்​டசபை தேர்தலில், தி.மு.க., தோல்விக்கான காரணம் குறித்து 234 தொகுதிகளில் கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட 18 சிறப்புக் குழு அமைத்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தர​விட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் மகளிர் அணி செயலர் ஹெலன் டேவிட்சன், தலைமை செயர்குழு உறுப்பினர் இளமகிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

திருப்போரூர் தனியார் மண்டபத்தில் தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், நியமிக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து கள ஆய்வை மேற்கொண்டனர். கூட்டத்தில், பங்கேற்றவர்களை தனி அறையில், தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க., வேட்பாளரின் நிறை, குறைகளை கேட்டறிந்தனர். இந்த கள ஆய்வில் இறுதிக்கட்ட முடிவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement