தினமலர் செய்தி எதிரொலி: காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு ரோடு சீரமைக்கப்பட்டது.
முதுகுளத்துார் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது முதுகுளத்துார் ஆற்றுப்பாலத்தில் இருந்து அரசு மருத்துவமனை, பஜார் வழியாக கடலாடி ரோடு வரை புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதில் முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
இதனால் ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு ரோடு சமன் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
---
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்