சமுதாய நலக்கூடம் அமைக்க அணைக்கட்டு மக்கள் கோரிக்கை
செய்யூர்:அணைக்கட்டு பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அருகே உள்ள அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அணைக்கட்டு பகுதியில் சமுதாயக்கூடம் வசதி இல்லை. இதனால், செம்பூர், தண்டரை, அணைக்கட்டு, கொஞ்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த தனியார் மண்டபம் தேடி பவுஞ்சூர், கூவத்துார் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அரசு நிகழ்சிகள் மற்றும் அரசியல்கட்சி கூட்டங்கள் நடத்த இட வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அணைக்கட்டு பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பந்தலுார் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அவசர அவசியம் வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனரிடம் மனு
-
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ‘சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்தது
-
மரவள்ளி தோட்டங்களில் பூச்சிதாக்கு தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
-
கணவர் மாயம் மனைவி புகார்
-
காரைக்கால் -பேரளம் ரயில்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
-
மருந்து கடைகள் மூடல்