நந்தா இன்ஜி. கல்லுாரியில் 21 வது பட்டமளிப்பு விழா

திருப்பூர்: நந்தா பொறியியல் கல்லுாரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட சர்வீஸ்நவ் மென்பொருள் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோகுல கண்ணன் நரசிம்மன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டங்கள் வழங்கினார்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் பேசுகையில், ''145க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், நந்தா கல்லுாரிக்கு வந்து, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு காலத்தில், மாணவர்கள் தினமும் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும்,'' என்றார்.

கல்லுாரி முதல்வர் ரகுபதி, ஆண்டறிக்கை வாசித்து, அனைத்து துறைகளின் சாதனை குறித்து விளக்கினார். தர வரிசையில் இடம்பெற்ற, 34 மாணவர்கள் உட்பட, 725 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


---

Advertisement