அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
நரிக்குடி:நரிக்குடி அம்மன்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழு என போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள், 3 மாற்று வீரர்கள் என 15 குழுவினர் கலந்து கொண்டனர். ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த காளையர்கள் காளையை தழுவ வேண்டும்.
இல்லை என்றால், காளை போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதையடுத்து காளைகளை சில குழுவினர் போட்டி போட்டு தழுவினர். வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களும், காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். போட்டியை காண திருச்சுழி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர் கண்டு களித்தனர்.