சின்னமனுாரில் சுத்தம் செய்யாத சாக்கடையால் சுகாதாரக்கேடு
சின்னமனூர்:சின்னமனூரில் சீப்பாலக்கோட்டை ரோட்டில் சாக்கடை சுத்தம் செய்யாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
சின்னமனூர் நகராட்சியில் வீதிகள் தோறும் சேகரமாகும் குப்பை குவியல்கள் அப்புறப் படுத்தாமல் உள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை சாக்கடை சுத்தம் செய்யும் நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு இன்றி உள்ளது. அதனால் குப்பை பிரித்து வாங்குவது இல்லை.
மெயின்ரோட்டில் வி.ஏ.ஓ. அலுவலகம் முதல் காந்தி சிலை வரை ரோட்டிற்கு கிழக்கு பக்கம் தோண்டிய சாக்கடையை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.
தற்போது சீப்பாலக்கோட்டை ரோட்டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி சாக்கடைகள் மீது கடைகள் கட்டி அமர்ந்துள்ளனர். சாக்கடை சுத்தம் செய்து 20 ஆண்டுகளாகும் என்கின்றனர்.
கமிஷனர், துப்புரவு ஆய்வாளர் தங்களின் பணிகளை பார்க்காமல் மெத்தனமாக உள்ளனர்.
சீப்பாலக்கோட்டை ரோட்டில் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
திருவொற்றியூரில் நள்ளிரவு 3 மணி நேரம் மின் தடை: மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
-
சிகிச்சையில் இருந்த வாலிபர் பலி கொலை வழக்காக மாற்றம்: 5 பேர் கைது
-
தாம்பரம் - சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
-
மாநில வாலிபால் சாம்பியன்ஷிப்: இந்தியன் வங்கி அணி அபார வெற்றி
-
அரசு பஸ் நடத்துனரை தாக்கியவர் கைது
-
உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவு