மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில், பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகே உள்ள பெருமாள் கோவிலில் தொடங்கி, பெரிய தேர் நிலையம், மேற்கு கடை வீதி, மார்க்கெட் வீதி, மேட்டுத்தெரு, பி.டி.ஓ., அலுவலகம் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement