தம்பதியரிடையே தகராறு மனைவி விஷம் குடித்து சாவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த சிவாயம் பஞ்., குப்பாச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்
வடிவேலு; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா, 35;
இவர்களுக்கு, கடந்த, 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று
குழந்தைகள் உள்ளனர். கணவன்,
மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு,
பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின், சமாதானம் பேசி ஒன்றாக வாழ்ந்து
வந்தனர்.
இந்நிலையில், கடந்த, 11-ல் கணவன், மனைவியிடையே தகராறு
ஏற்பட்டுள்ளது. இதனால்
மனமுடைந்த சுகன்யா, விஷம் குடித்துவிட்டு
தாயிடம் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சுகன்யாவின் தாய்
சாந்தி, உடனடியாக மகள் வீட்டிற்கு சென்று அவரை மீட்டு குளித்தலை அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து, கரூர் அரசு
மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம்,
உயிரிழந்தார். இதுகுறித்து சுகன்யாவின் தாய் சாந்தி கொடுத்த
புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
உத்தரகண்ட் புலிகள் காப்பகத்தில் இரட்டை யானை குட்டிகள் பிறப்பு
-
அ.ம.மு.க., - அ.தி.மு.க.,வினரை மந்திரியாக்கினால் சி.பி.ஐ., விசாரணை: எச்சரிக்கிறார் தினகரன்
-
அமைச்சரவையில் இடம் பெறுவதா, வேண்டாமா? குழப்பமான நிலையில் திருமாவளவன்
-
வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'
-
பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு அழைகழிப்பு திருக்கோவிலுார் நகராட்சியில் மக்கள் அவதி
-
முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து; அடுத்த வாரம் டில்லி செல்கிறார்