மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

குளித்தலை:குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கல் தெருவை சேர்ந்தவர் நிவேதா, 25; இவருக்கும், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் குடித்தெருவை சேர்ந்த மணிகண்டன், 27, என்பவருக்கும் காதல் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.



கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக, ஆறு ஆண்டுகளாக பிரிந்து, நிவேதா பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த, 15 மாலை, 6:00 மணிக்கு, நிவேதா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கணவர் மணிகண்டன், குழந்தைகளை பார்க்க
சென்றுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு நிவேதாவை, மணிகண்டன் தாக்கி உள்ளார்.

இதுகுறித்து நிவேதா கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மணிகண்டன் மீது
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement