மாட்டு வண்டியில் மணல் திருட்டு

குளித்தலை:குளித்தலை அடுத்த கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதாக, ரெங்கநாதபுரம் வடக்கு வி.ஏ.ஓ., வினோத் குமார், 21, -என்பவருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, கடந்த, 15 இரவு, 11:30 மணிக்கு, வி.ஏ.ஓ., வினோத்குமார் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவரை கண்ட அடையாளம் தெரியாத நபர், மணலுடன் கூடிய மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடினார். விசாரணையில், கட்டளை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 37, என்பது தெரியவந்தது. வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement