கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: காப்பு கட்டிய பக்தர்கள்
கரூர்:கரூர்
மாரியம்மன் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள், நேற்று
காப்பு கட்டி கொண்டனர். மேலும், புதுமண தம்பதியர் கம்பத்துக்கு
தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.
கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி
திருவிழா, கடந்த, 10ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
அதைதொடர்ந்து, கடந்த, 15ல் பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை,
நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள், கோவிலுக்கு சென்று நீண்ட
வரிசையில் நின்று,
கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றியபின், காப்பு
கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர். மேலும், நேற்று விடுமுறை நாள்
என்பதால், புதுமண தம்பதியர் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சுவாமியை
வழிப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வரும்,
25ல் தேரோட்டம், 24 முதல், 26 வரை மாவிளக்கு ஊர்வலம், பால்குட
ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 27ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய
நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. வரும் ஜூன், 4ல் பஞ்ச பிரகாரம், 5ல் புஷ்ப
பல்லக்கு, 6ல் ஊஞ்சல் உற்சவம், 7ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய
நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மாரியம்மன் கோவில்
திருவிழாவையொட்டி, நேற்று காலை கரூர் எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத்,
கோவில் வளாகம் மற்றும் கம்பம் ஆற்றுக்கு செல்லும் பசுபதிபாளையம்
அமராவதி ஆற்று
பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து
ஆய்வு செய்தார்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து