கரூர் - திருச்சி பைபாசில் சீரமைப்பு பணி தீவிரம்

கரூர்:கடந்த, 2008ல், கரூர்-திருச்சி இடையே, 82 கி.மீ., துாரம், 516 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி நடந்தது. இதில், மணவாசி முதல் கரூர் வரை, 22 கி.மீ., நான்கு வழி
சாலையாகவும், மற்ற பகுதி இருவழி சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு, திருச்சி மாவட்டம், திருப்பராய்துறையில் இருந்து கரூர் வரை உள்ள, 63 கி.மீ., சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டு திறந்துவிட்டதால், கரூர் மாவட்டம் மணவாசி, திருச்சி மாவட்டம் திருப்பராய்துறை ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இச்சாலை வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ், லாரிகள் உட்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. சாலையில் கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சரியாக சென்றாலும், சாலை பழுது காரணமாக விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், மாயனுார் முதல் சாலை சீரமைப்பு பணி துவங்கப்பட்டது. பழைய சாலை, ஜல்லிக் கற்கள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக, புதிய
தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement