பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஜம்மு - காஷ்மீர் அரசு ஆலோசனை
ஸ்ரீநகர்: மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ஜம்மு - காஷ்மீரில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஆளும் தேசிய மாநாட்டு கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒமர் அரசு, பூரண மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான வரைவு தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கூறப்படுகிறது.
இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் தன்வீர் சாதிக் கூறியுள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, கலால் வருவாயை விட பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் தரப்பினரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மது விற்பனைக்கு விரைவில் முழு தடை விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு இறுதிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில், மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்கிஸ்தான் போதை மருந்து ஓகே. 100 ல் 40 காஷ்மீரி ஜிஹாதிகள் போதையில் தான் ஆட்டம். வியாபாரம் மற்றும் போதை அடிமைத்தனம் ஆகியவற்றை பாக்கிஸ்தான் ஊக்குவித்து தீவிரவாதத்தை அதிகரிக்க செய்கிறான். அங்கே வாங்கி டெல்லி, மும்பை, பெங்களூருவில் போதை பொருள் விற்கும் அமைதி வழி மர்ம நபர்கள் அதிகம்.
சிகரெட், மது தடை சுற்றுலாவை பெரிதும் பாதிக்கும். மதுவால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அங்கு இல்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாக்குவங்கிக்காக எதையாவது செய்து விட்டு பின்னர் வருந்த வேண்டாம்.
இது ஒருவித போதைக்கூட்டம்..எந்த திறமையும் பகுத்தாய்வு அறிவும் இல்லாத இது போன்ற மோக கூட்டத்தால் நாடு அழிவைத்தான் சந்திக்கும்
அரசு விற்க கூடாது ...அதே சமயம் சுற்றுலாவை கருத்தில் கொண்டு மூன்று நட்சத்திர ஹோட்டல் மேற்கொண்டு அங்கு விற்க அனுமதிக்கலாம் ..
Before implementing the law, think of tourism and other. Already tourist are fearing to come, if this happens, then tourism will be complete collapse.
நம் தமிழ் நாடு போல சேல்ஸ் கிடையாது. கூவி கூவி விற்கிறார்கள் அதுவும் டிஸ்கோவுண்ட் இல். தாராளமாக இழுத்து மூடி விடலாம்.
அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகிள் 47 சொல்வது மதுவிலக்குதான் இந்தியா முழுவதுக்குமான சட்டம் .மாநில அரசுகள் இந்த சட்டத்திலிருந்து மருத்துவ காரணங்களுக்காக விலக்கு அளிக்கலாம் என்பதுதான் சட்டம் .ஒருவேளை உச்சநீதிமன்றம் ஏதாவது ஒரு வழக்கில் மாநில அரசுகள் மக்கள் அருந்தும் மது விற்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருந்தால் அது சட்டத்திற்குட்பட்ட தீர்ப்பாகாது . அரசியல் சட்ட அமைப்பால் கான்ஸ்டிடியூஷனல் பெஞ்ச் மூலம் மறுபரிசீலனைக்கு உகந்தது .நான் அறிந்தவரையில் உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் தொழிற்சாலைகளில் தொழில் உற்பத்திக்கு உபயோகிக்கும் எரிசாராயம் மாநில வருவாய் கருதி கார்போரேட் அமைப்பு மூலம் விற்கலாம் என்பதுதான் தீர்ப்பு . மக்கள் அறிந்து சரிபார்க்கவேண்டும் .
நல்லது..மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து