சிந்தலவாடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிந்தலவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுந்தோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா
நடத்தப்பட்டு
வருகிறது.
இந்தாண்டு, நேற்று மாரியம்மன் கோவில்
திருவிழாவை முன்னிட்டு, சிந்தலவாடி,
லாலாப்பேட்டை, விட்டுக்கட்டி,
ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள், மாலை கொண்டு வந்து திருத்தேரை
அலங்கரித்தனர். பின், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து
திருத்தேரில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பக்தி கோஷம்
முழங்க திருத்தேரை கோவிலை சுற்றி, மூன்று முறை திருவீதி உலா கொண்டு
வந்தனர்.
பின், மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள்,
மாவிளக்கு பூஜைகள் நடந்தன. இந்த தேர் திருவிழாவிற்கு லாலாப்பேட்டை,
பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, மேல சிந்தலவாடி,
மகிளிப்பட்டி,
உடையந்தோட்டம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, புனவாசிப்பட்டி,
அந்தரப்பட்டி, ஆகிய பகுதி கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து