பிரதான சாலையில் பிளக்ஸ் பேனர் ஏனாத்துாரில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: ஏனாத்துார் மும்முனை சாலை சந்திப்பில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனரால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
வாக ன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் சாலைகள் மற்றும் சந்திப்புகளில், பேனர் அமைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 'பிளக்ஸ் பேனர்கள், விளம்பர அட்டைகள் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் மும்முனை சாலை சந்திப்பில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், பிளக்ஸ் பேனர்கள் புற்றீசல் போல முளைத்து உள்ளன.
மும்முனை சாலை சந்திப்பு வளைவு பகுதியில் உள்ள இந்த விதி மீறல் பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எ னவே, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், ஏனாத்துார் மும்முனை சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள விதிமீறல் பேனர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து