வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வீடியோக்கள்; சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி
திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் அமைதியாக திருப்பூரில் வாழ்ந்து வரும் நிலையில், வடமாநிலங்களில் நடந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி, குழப்பம் ஏற்படுத்துவோர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் நகரம், பல லட்சக்கணக்கான மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி பெற்ற போது, வேலை தேடி திருப்பூர் வந்த வெளிமாவட்ட மக்கள், வசதியான வாழ்க்கையை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும், திருப்பூரை நோக்கி வந்து குடியேறினர்.
கடந்த, 2000 வது ஆண்டில் துவங்கிய இப்பயணம், நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றது. ஒரு தொழிலாளி திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் போது, அதிக தொழிலாளர்களை புதிதாக திருப்பூருக்கு அழைத்து வருவார். தற்போது, தொழிலாளர்களே, கூட்டம் கூட்டமாக வருவதும், செல்வதுமாக இருக்கிறது.
தங்களது சொந்த ஊரை போலவே திருப்பூரில் சுதந்திரமாக தங்கியுள்ளனர். நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, வீதிக்கு ஒரு வடமாநில குடும்பங்களாவது வசிக்கத்தான் செய்கின்றன.
தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர், எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், தொழிற்சாலைகளில் பாதுகாப்பாக பணியாற்றுகின்றனர்.
பொதுமக்கள் மத்தியிலும் இணக்கமாக இருந்து, பழகிவிட்டனர். இதனால், ஒருமைப்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்கு, திருப்பூர் ஆகச்சிறந்த உதாரணமாக இன்றளவும் விளங்கி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பனியன் தொழில் மட்டுமல்லாது, பல்வேறு தொழில்களிலும் வடமாநில தொழிலாளர் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வமாக இருந்தும், பனியன் தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, தொழிலாளர் அதிகம் தேவைப்படுகின்றனர்.
ஒற்றுமையாக வசித்து வரும் வடமாநில மக்களும், தமிழக மக்களும் பரஸ்பரம் அன்பு பாராட்டுகின்றனர். இருப்பினும், சில சமூக வலைதளங்களில் முகவரியற்றவர்கள், தங்களது சுயநலத்துக்காக வீண் வதந்தியை பரப்பி, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் விபரீத விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
தொழிற்சங்கங்களுடன் இணைந்து வடமாநில தொழிலாளருக்கு எதிராக, வீண் வதந்தி பரப்புவோர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, தொழில் துறையினர் முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருப்பூரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
@quote@ தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர், எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், பாதுகாப்பாக பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் இணக்கமாக இருந்து, பழகிவிட்டனர். இதனால், ஒருமைப்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்கு, திருப்பூர் ஆகச்சிறந்த உதாரணமாக இன்றளவும் விளங்கி வருகிறது.quote
@block_B@ சட்ட ரீதியான நடவடிக்கை
தொழிலாளர் பற்றாக்குறையை உணர்ந்து, ஒவ்வொரு வடமாநில தொழிலாளர்களையும், கவனமாக பராமரித்து வருகிறோம். மிகவும் சுதந்திரமாக பணியாற்றி, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். எதிர்காலத்தில், இன்னும் அதிக தொழிலாளர்கள் திருப்பூருக்கு தேவை. இருப்பினும், சில சமூக வலைதளங்களில், சம்பந்தமில்லாத வடமாநில வீடியோக்களை வைத்துக்கொண்டு, திருப்பூரில் குழப்பம் விளைவிக்கின்றனர். இது, வடமாநில தொழிலாளர் மத்தியில் வீண் பதற்றத்தை உருவாக்கும். தொழிலாளர் நலனில் தொழிற்சங்கங்களும் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கின்றன. குறிப்பாக, வடமாநில தொழிலாளர் நலனுக்காக, தொழிற்சங்கங்களும் பணியாற்றுகின்றன. அவ்வாறு இருக்கையில், வடமாநில தொழிலாளருக்கு எதிராக, வதந்தி பரப்புவோரை தடுக்க, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- குமார் துரைசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர்.
எந்த பிரச்னையும் இல்லை!
வடமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூரிலோ, தமிழகத்திலோ எந்த பிரச்னையும் இல்லை; அமைதியாகவும், சுதந்திரமாகவும் வசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில், தவறான தகவல்களை பரப்புவதால் குழப்பம் ஏற்படுகிறது. தொழிற்சங்கங்கள், வடமாநில தொழிலாளர் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன; போலீசாரும், வடமாநில தொழிலாளர் நலனின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சம்பத், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர்.block_B
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து