அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்
சென்னை: ''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் மனுக்கள் மீது முடிவெடுக்க, காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை,'' என, சபாநாயகர் பிரபாகர் கூறினார்.
தான் வெற்றி பெற்ற, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, சபாநாயகர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், அவர் கூறியதாவது:
சட்டசபை அ.தி.மு.க., தலைவர், கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, அ.தி.மு.க.,வின் இரண்டு பிரிவு எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் இருந்தும், மனுக்கள் தரப்பட்டுள்ளன.
மனுக்கள் மீது முடிவெடுக்க, அரசியலமைப்பு சட்டத்தின்படி, எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும், சபாநாயகருக்கு விதிக்கப்படவில்லை. அவர்கள் அளித்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. உரிய நடைமுறைகளை பின்பற்றி, அவற்றின் மீது தகுந்த முடிவு எடுக்கப்படும். சட்டசபை கூடும்போது, அது தொடர்பாக முறைப்படி அறிவிக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
தெரியுது நீ எப்படி முடிவு எடுப்பாய் என்று.
ஐயா இது பைபிளில் எத்தனாவது வசனம். கொஞ்சம் படித்து காட்டுங்களேன். சட்டசபையில்தான் வேதம் ஓதுவீரோ ?
அவரு பெயர் ஜான் கிறிஸ்டின் தேவாரம் பிரபாகர் இன்னும் நிறைய பார்க்கலாம் பைபிள் வசனங்களைமேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து