பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

2


@quote@ டாஸ்மாக் என்பது ஆண்டுதோறும் 50,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக வளர்ந்துவிட்டது. கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற அல்லது அவர்களின் பினாமிகளாக செயல்படும் 19 மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர்.

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல், 'பார்' டெண்டர் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி என, ஆண்டுக்கு குறைந்தது ௧ லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் அரங்கேறி வருகிறது.

தற்போது, 4,765 மதுக்கடைகளில் வெறும் 717 கடைகளை மட்டும் மூடுவதால் என்ன அடிப்படை மாற்றம் நிகழ்ந்து விட போகிறது? மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் நவீன பார்களும் பெருகிவிட்டன. மது வருமானம் இன்றி தமிழக அரசு இயங்காது என்ற நிலையை ஒழிக்க வேண்டும். பூரண மது விலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்.

- கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சிquote

Advertisement