இந்தியாவில் முழுவேகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள்: பிரதமர் மோடி பெருமிதம்
கோதன்பெர்க்: இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் நிறுவனங்கள் சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.










உயரிய விருது
இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ராயல் ஆர்பர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருதை, அந்நாட்டின் இளவரசி விக்டோரியா, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது மோடிக்கு கிடைக்கும் 31வது உயிரிய விருதாகும்.
முன்னேற்றம்
இதனைத் தொடர்ந்து, தொழில்துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மின்னணுவியல், தொழில்நுட்ப உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நகர்ப்புற மாற்றம், சுகாதாரம், மற்றும் உயிர் அறிவியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகிய அடிப்படை கொள்கையின்படி இந்தியா செயல்பட்டுவருகிறது. அரசின், அரசியல் உறுதி காரணமாக, இந் தீர்திருத்த விரைவு ரயில் முழு வேகத்தில் முன்னேறிவருகிறது.
ஜனநாயக வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் ஸ்திரத்தன்மை போன்றவற்றால், இந்தியாவும், ஸ்வீடனும் இணைக்கப்பட்டுள்ளன. புதுமை மற்றும் ஸ்திரத்தன்மையில் ஸ்வீடனின் பலங்களை இந்தியாவின் திறன் மற்றும் வளர்ச்சி வேகத்துடன் இணைக்க வேண்டும்.
இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், உற்ப்தி, சேவைகள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலிகள் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.
உலகில் முதலீடு, புதுமை மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், எளிதாக தொழில் செய்தல், நிர்வாகத்தில் கவனம், டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், துடிப்பான உற்பத்தி சூழல் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
மேலும் இந்தியாவில் வடிவமைத்து, இந்தியாவில் தயாரித்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுங்கள் என்ற இந்தியாவின் கொள்கையை எடுத்துக்காட்டி, ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவை நம்பகமான மற்றும் உகந்த பொருளாதார சக்தியாக ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், ஸ்விடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் கிரிஸ்டெர்சன், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர்லையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆமா... அவன் அவன் இஷ்டத்துக்கு ஆட்டையப் போட ஆரமிச்சுட்டான். சமீபத்தில் நீட் ஊழல்.
ஆமாம் நிச்சயமாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரத்தான் வேண்டும் ஏனென்றால் பொது அறிவின் நிழல் கூட எட்ட முடியாத கடைக்கோடியில் காரிருளில் மூழ்கி ஜாதி மதம் கட்சி என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருண்டு கிடக்கும் மனிதர்களுக்கும் வெளிச்சம் கிட்டும் வரை
பாஜக ஆட்சிக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது உண்ணதமான வளமான வளர்ச்சிக்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்று எங்க பார்த்தாலும் ஒலிபரப்ப படுகிறது இன்னுமா சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கிறது
ஏல வாடகை வாயான் சிவநாயகம்...அங்க ஸ்டாலின் பத்திய செய்தியில் பாரு
சிவநாயகம் பல வருடம் கோமாவில் இருந்த மாதிரியே பேசுறான்
எத்தனை வருடமா
கனவிலும் நினைக்காத வளர்ச்சியை இந்தியாவுக்கு கொடுத்த மோடிஜியை பாராட்ட வார்த்தைகளே இல்லை....... இந்த 11ஆண்டுகளில் உலகையே வியக்க வைத்தவர்.
முடிஞ்சதை செய்கிறார் .... சும்மா சொல்லக்கூடாது ...
மாநில நிர்வாகம் மற்றும் நீதிமன்ற நிர்வாக சீர்திருத்தம் செய்யாமல் வளர்ச்சி வேகம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை முழுமை பெறாது. தேர்தல் ஆணையம் ஓரளவு தன் அதிகாரம் கொண்டு சீர்திருத்த துவங்கி விட்டது. ஆனால் மாநில நிர்வாகம் மற்றும் நீதிமன்றம் கொடுக்கப்பட்ட அதிகாரம் மீறி செயல்படுகிறது. தேசிய அளவில் பல முக்கிய ஆவணங்கள் ஒருங்கிணைப்பு இல்லை.
அதனால தான் ஒரு டாலர் 96.27 ... என்ன ஒரு சாதனை ....
நம்புங்க. ..நாதன் பெரிய பொருளாதார புளி .. கொட்டை எடுத்த புளி
முரட்டு முட்டு விவேக் முதலில் நீட் தேர்வை பிழை இல்லாம நடத்துங்க ...பிறகு எனக்கு பொருளாதார புலி பட்டம் குடுங்க ...
இப்போ நம்பிட்டேன். நீ கொட்டை எடுக்காத புளி தான்...TNPSC பத்தி தெரியாத புளி....
அப்போ TNPSC பத்தி பேசலாமாமேலும்
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு