போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விழுப்புரம்: கல் குவாரியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த போத்துவாய் ஊராட்சி துணைத் தலைவர் முருகன் தலைமையில் கொடுத்துள்ள மனு;
போத்துவாய் மற்றும் பழவலம் கிராமங்களுக்கு மத்தியில் கல் மற்றும் ஜல்லி எடுக்கும் குவாரி அமைந்துள்ளது. இந்த குவாரியானது 15.42 எக்டர் அளவிற்கு மலையை குடைந்து அழித்து விட்டது. இதனால், ஏரி, கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெடி வைக்கும்போது வீடுகள் இடியும் நிலையும், காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர் ஆதாரம் மற்றும் காற்று மாசுபாடு ஏற்படும் வகையில் செயல்படும் கல் குவாரியை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement