பெண்ணிடம் செயின் பறிப்பு: போலீஸ் தீவிர விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் செயினை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு மனைவி மஞ்சுளா, 55; இவர், மே 18 காலை 9:30 மணிக்கு ரயில்வே மருத்துவமனை சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேரில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி மஞ்சுளா கழுத்திலிருந்து 6 சவரன் தாலிச் செயினை பறித்து கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டு பைக்கில் தப்பினர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நடந்த இந்த சம்பவம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கேமராவில் பதிவாகிய மர்ம நபர்களின் வீடியோ மூலம் தேடி வருகின்றனர்.

Advertisement