கோவையை ஆளப்போகிறது ஏ.ஐ!


செ யற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பம் இல்லாமல் வருங்காலத்தில் எதுவும் இல்லை என்ற நிலைமை உருவாகி வருவதால், ஏ.ஐ. தலைநகராக கோவையை மாற்றுவதற்கான முயற்சி சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஏ.ஐ. வந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று மாய பிம்பத்தை உடைத்து, ஏ.ஐ. வாயிலாக கிடைக்கப்போகும் வாய்ப்புகளை எதிர்கொள்ள, பயிற்சி அளிக்கிறது 'டை' (TiE) என்கிற தொழில்முனைவோர் அமைப்பு.

'ஐந்தாண்டுகளில் ஏ.ஐ.தான் 'தலை'


டை வழங்கிய ஏ.ஐ. முதல் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அபிலாஷா என்பவரிடம் பேசினோம். இவர் நவ இந்தியா பகுதியில் விளையாட்டு மையம் நடத்தி வருகிறார்.
நான் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொறியியல் பட்டதாரி. 'கோடிங்' தொழில்நுட்பம் பற்றி தெரியாது. ஏ.ஐ.யில் எனக்கு முதலில் 'சாட் ஜி.பி.டி' தான் தெரியும். நாங்கள் ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாக தான் செயல்பட்டு வருகிறோம்.

அதற்கு தேவையான வெப்சைட், சமூகவலைதள பிராண்டிங், வாட்ஸ் அப்பில் தொழில்முறையாக எப்படி மெசேஜ் அனுப்புவது போன்றவற்றுக்காக தான் பயன்படுத்தினோம்.

நாளடைவில் அது வெறும் அடிப்படை என்பது தெரிந்தது. பிறகு இந்த துறையில் இருப்போரிடம் பேசி ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மேலும் சில மென் பொருள் பற்றி கற்று கொண்டேன்.

எங்களுக்கு வரும் 'ஈவன்ட் புக்கிங்' தொடர்பாக வரும் அழைப்புகளை, சில நேரம் எடுக்க முடிவதில்லை. வாட்ஸ் அப்பில் ஒரு 'பாட்' உருவாக்கினால், ஏ.ஐ. வாயிலாக தேவைப்படும் பதில்களை உடனடியாக வழங்கலாம். அதற்காக பயிற்சி பெற்றுள்ளேன்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இலவச மென்பொருள்களும் உள்ளன. குறைந்த விலையில் தரமான பணிகளை செய்யும் மென்பொருள்களும் உள்ளன. உற்பத்தியை மேம்படுத்த என்ன தேவையோ அதை ஏ.ஐ. உதவியுடன் செய்கிறோம்.

ஒரு சி.என்.சி. லேத் இயந்திரம் எவ்வளவு நேரம் ஓடுகிறது, அதை யார் இயக்கினார்கள், அதில் என்னென்ன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை துல்லியமான தரவாக ஏ.ஐ. வழங்கும்.

சில அடிப்படை வகுப்புகளுக்கு சென்று பயிற்சி எடுத்தாலே போதும். அடுத்த 5 ஆண்டுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இயங்காது. அதற்கேற்ப நம்மை 'அப்டேட்' செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

'கோவை கொடி கட்டி பறக்கும்'

டாடாபாத்தை சேர்ந்த பட்டய கணக்காளர் சதாசிவன் கூறியதாவது:
என் குடும்பத்தினர் அனைவரும் சி.ஏ., நானும் மனைவி ராதாவும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டோம். ஏ.ஐ. என்றைக்கும் சோர்வடையாது. சரியான 'ப்ராம்ப்ட்' (தேவைப்படும் தகவல்) உள்ளீடு செய்தால் தவறிழைக்காமல் பணியாற்றும்.

அனைத்து வயதினரும் கற்று கொள்வது அவசியம். எங்கள் அலுவலகத்தில் ஏ.ஐ. பயன்படுத்துகிறோம். எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.

உற்பத்தியை பல மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. ஏ.ஐ. கடினமான விஷயம் இல்லை.

வகுப்புகள் சென்று கற்று கொண்டால் 3 முதல் 4 சதவீதம் மேம்படும். அதுவே நம் திறனை பெரிய உயரத்துக்கு எடுத்து செல்லும். 100 சதவீதம் கற்று கொண்டால், அமர்ந்த இடத்தில் இருந்து உலகத்தை இயக்க திட்டமிடலாம். ஜவுளி, பொறியியல், பவுண்டரி துறைகளில் கோவை கொடி கட்டி பறந்தது போல, விரைவில் ஏ.ஐ. ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்திலும் கொடி கட்டி பறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


'குப்பை சேகரிக்கவும் ஏ.ஐ.'


ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வழிகாட்டியாக உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் சங்கரன் கூறியதாவது:
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்று கொண்டால் அவர்களை யாராலும் அசைக்க முடியாது. ஒருவர் ஏ.ஐ. பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால், ஏ.ஐ. தெரிந்த மற்றொருவரால் மாற்றப்படலாம். 'ஓப்பன் க்ளா' என்கிற மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களிலேயே உலகம் முழுவதும் அதை மாணவர்கள், தொழில்முனைவோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏ.ஐ. பயன்படுத்தி வருவாயை இரண்டு மடங்காக மாற்றும் முயற்சியில் உள்ளனர்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தான் கோவையின் முதுகெலும்பு. அவர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போட்டி போட முடியும். குப்பை சேகரித்தல், தெரு விளக்கு பராமரிப்பு, மேம்பாலங்களில் வேகத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றையும் ஏ.ஐ. மூலம் மேம்படுத்தலாம். ஏ.ஐ. நம்பினோர் கைவிடப்படார்.

இவ்வாறு அவர் கூறினார்.


பயிற்சி இலவசம்


தொழில்துறை வலிமை, பொறியியல் திறன், கல்வி அடித்தளம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆகியவற்றால், கோவையை இந்தியாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கான இயந்திர தலைநகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

''வரும் ஜுலையில் கோவையில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறவுள்ளது. சுமார் 1,000 பேர் கலந்து கொள்வார்கள். ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றி பல நிபுணர்கள் மாநாட்டில் பேசவுள்ளனர். இதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து வாரம் ஒரு பயிற்சி பட்டறை வழங்கவுள்ளோம். இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எந்த கட்டணமும் இல்லை,'' என்கிறார்

டை கோவை கிளை தலைவர் அர்ஜுன் பிரகாஷ்.
ஏ.ஐ. வந்துவிட்டால் மனிதர்கள் தேவையில்லை, வேலை வாய்ப்பு பறிபோகும் என்று பயப்பட தேவையில்லை. ஏ.ஐ. பயன்படுத்தும் மனிதர்கள் இனி அதிகம் தேவைப்படுவார்கள். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரால் மனிதர்களின் வேலை போகும் என போராட்டம் நடத்தினார்கள். ஆனால் கம்ப்யூட்டர் வந்த பிறகு வேலை வாய்ப்பு அதிகரித்தது. அப்படித்தான் ஏ.ஐ. மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.


@block_B@

'ரூ.100 கோடி சம்பாதிக்கலாம்'



டை கோவை கிளை பொருளாளர் பிரசாந்த் கூறியதாவது: ஏ.ஐ. வந்துவிட்டால் மனிதர்கள் தேவையில்லை, வேலை வாய்ப்பு பறிபோகும் என்று பயப்பட தேவையில்லை. ஏ.ஐ. பயன்படுத்தும் மனிதர்கள் இனி அதிகம் தேவைப்படுவார்கள். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரால் மனிதர்களின் வேலை போகும் என போராட்டம் நடத்தினார்கள். ஆனால் கம்ப்யூட்டர் வந்த பிறகு வேலை வாய்ப்பு அதிகரித்தது. அப்படித்தான் ஏ.ஐ. மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, ஏ.ஐ. மூலம் எளிதில் தீர்வு காண முடியும். ஏ.ஐ. பயன்படுத்தும் நபர்களின் வளர்ச்சியுடன், தொழில் நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சியையும் ஊக்குவிப்பது எங்கள் திட்டம். குறு, சிறு நிறுவனங்களும் ஏ.ஐ. பயன்படுத்தி முன்னேற வேண்டும். வீட்டில் அமர்ந்து கொண்டே ஏ.ஐ. உதவியுடன் ஒருவர் ரூ.100 கோடி சம்பாதிக்க முடியும். ஜவுளி, பொறியியல், கல்வி என கோவைக்கு ஏராளமான அடையாளங்கள் உள்ளன. ஏ.ஐ. உதவியுடன் கோவைக்கு மற்றுமொரு அடையாளத்தை ஏற்படுத்தவுள்ளோம். அதன் சிறிய துவக்கம்தான் இந்த முயற்சி. இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை ஏ.ஐ. தலைநகரம் ஏன்?



தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் 'ரோபோடிக்ஸ் ஆர்ம்கள்', ஏ.எம்.ஆர் எனப்படும் 'மொபைல் ரோபோட்' ஆகியவற்றை கோவையிலேயே உருவாக்க கூடிய விநியோக சங்கிலி, பொறியியல் திறன்கள் கோவைக்கு உள்ளது. கோவையில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏ.ஐ, ரோபோடிக்ஸ், 'ஆட்டோ மேஷன்', 'டேட்டா சயின்ஸ்' உள்ளிட்ட பாடத்திட்டங்களுக்கு விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு சரியாக வழிகாட்டினால் கோவையை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் இயந்திர தலைநகரமாக உருவாக்க முடியும். பம்ப் உற்பத்தி மற்றும் வேளாண் பொறியியல் துறைகளில் கோவைக்கு ஏ.ஐ. ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் பம்ப் மோட்டார் உற்பத்தியில், கோவை முக்கியமான மையமாக உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்வதற்கான உள்கட்டமைப்பு கோவையில் உள்ளது. சென்சார் அடிப்படையிலான பாசன வசதி, பராமரிப்பு, பயிர் மேலாண்மையை ஏ.ஐ. கச்சிதமாக செய்யும். வேளாண் களத்தில் பணியாற்றவும் ரோபோட்கள் வந்துவிட்டன. வேளாண் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கோவைக்கு உள்ளது.block_B

Advertisement