கொடி கட்டி வர்றாரு 'மக்களின் எம்.எல்.ஏ.,'
கோவை: தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுயேச்சை வேட்பாளர், மக்களின் எம்.எல்.ஏ., என்று காரில் போர்டு மாட்டி வலம் வருகிறார்.
சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் தாஹிர் உசைன். கை நிறைய மோதிரங்கள், பிரேஸ்லெட் அணிந்து நூதனமாக பிரசாரம் செய்தார். அவருக்கு 278 ஓட்டுகள் கிடைத்தன. தேர்தல் முடிந்தவுடன் அவர் த.வெ.க.வில் இணைந்து விட்டார். தன்னுடைய காரில் மக்களின் எம்.எல்.ஏ., என்று போர்டை மாட்டி அவரின் பெயர் மற்றும் தொகுதியை குறிப்பிட்டுள்ளார்.
காரில் த.வெ.க. கொடியும் மாட்டப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., என்கிற தோற்றத்துடன் அவர் பந்தாவாக வலம் வருவதால், பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதுகுறித்து தாகிர் உசேனிடம் கேட்டபோது, எனக்கு ஓட்டளித்த 278 மக்களுக்கு நான் தான் எம்.எல்.ஏ., த.வெ.க., கட்சி தொடங்கியபோதே உறுப்பினர் அட்டை வாங்கிவிட்டேன். மக்களின் எம்.எல்.ஏ., என்பதற்கு கீழ் சுயேச்சை வேட்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளேன். நான் அதிகாரத்தை எல்லாம் தவறாக பயன்படுத்த மாட்டேன். மக்கள் பணிகளுக்கு எம்.எல்.ஏ.,வுக்கு பக்க பலமாக உதவி செய்வேன், என்றார்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து