துாய்மை பணியாளர்களுக்கு உணவு வாங்கியதில் ரூ.67 லட்சம் பாக்கி; மாநகராட்சி மீது அதிகாரிகள் கடுப்பு
சென்னை: துாய்மை பணியாளர்களுக்கு, தங்கள் சொந்த செலவில் உணவு வாங்கி கொடுத்த தொகையை விடுவிக்க, சென்னை மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக, அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு .வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அவர்களது ஒருநாள் கூலி, 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் ஒரு வேலை உணவு வழங்கும் திட்டம், கடந்தாண்டு நவ., 15ல் தொடங்கப்பட்டது.
ஆறு மாதங்கள் அவசர கதியில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால், சரியான திட்டமிடலின்றி, துாய்மை பணியாளர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது.
இதையடுத்து, 'நிலைமை சரியாகும் வரை, அந்தந்த மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாக, துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும். வாகன செலவை ஏற்க வேண்டும்' என, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கான தொகையை சொந்த பணத்தில் இருந்து செலவிட்டு, பின் பெற்று கொள்ளலாம் எ னவும் தெரிவித்திருந்தது.
ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பணம் விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
முந்தைய தி.மு.க., அரசுக் கு ஏற்பட்ட அவப்பெயரை தவிர்க்கும் வகையில், அவசர அவசரமாக உணவு திட்டம் தொடங்கப்பட்டது. உணவு தயாரிக்கும் நிறுவனம், மறை மலை நகரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிக்கு உணவை கொண்டு வந்து சேர்த்தது.
போராட்டம் இதனால் பல துாய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வரவில்லை. மேலும், தாமதமாக வந்த உணவும், சாப்பிட முடியாத அளவிற்கு இருந்தது.
எனவே, நிலைமை சரியாகும் வரை, நான்கு நாட்கள், எங்கள் சொந்த பணத்தில் இருந்து உணவு வாங்கி தந்துள்ளோம்.
அதேபோல், மூன்று மாதம் வரை வாகன செலவை ஏற்றுள்ளோம். அதன்படி மொத்தம் 67.04 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.
இத்தொ கையை விடுவிக்கும்படி மாநகராட்சியிடம் ஆறு மாதங்களாக போராடி வருகிறோம். மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.
தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
சென்னை மாநகராட்சி எல்லையில் பிறக்கும் எந்த மாநிலம், நாட்டை சேர்ந்த குழந்தையாக இருந்தாலும், அதற்கான பிறப்புச் சான்றிதழை, மாநகராட்சி வழங்கி வருகிறது. மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் விபரம், நேரடியாக மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு, 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் சான்றிதழ், https://www.chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மருத்துவமனையில் பெயர் பதிவு செய்யும்போது, பெற்றோர் கொடுத்த மொபைல் எண் பயன்படுத்தி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கிடையே, பிறப்புச் சான்றிதழை எளிதாக பெறும் வகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது: பொதுமக்களின் வசதிக்காக, பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பெற்றோரது மொபைல் எண்ணுக்கு, தானாகவே பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். மேலும், பிறப்புச் சான்று கிடைக்க தாமதமானால், 94450 61913 என்ற வாட்ஸாப் எண்ணில் தகவல் அனுப்பினால், உடனடியாக பிறப்புச் சான்றிதழ் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.block_B
எவந்த நாட்டிலிருந்து வந்தாலும் பிறப்புச் சான்றிதழ். தவறில்லை. அதில் அவர்களது தாய் நாடு பதிவாகுமா என்பதே கேள்வி. ஏற்கெனவே 1 கோடிக்கும் மேல் எதிரி நாடான பங்களா தேசத்திலிருந்து ஊடுருவிய இருக்கிறார்கள் . தமிழ்நாட்டில். அவர்களது தாய்நாடு குறிப்பு பிறப்பு சான்றிதழில் கட்டாயம்இருக்க வேண்டும்
அனைத்திலும் ஊழல் திராவிட மாடல் அதன் மறு வடிவம் தற்போதைய ஆட்சி என்று சொல்கிறார்கள் கமல் போன்றவர்கள் முதல் கோணல் முற்றும் கோணல்
ஊழல், யார் வந்தாலும் அதை ஒழிக்க முடியாது. இதுதான் உண்மை.மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து