மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் மிதிவண்டி தினம்
பாகூர்: பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மிதிவண்டி தின நிகழ்ச்சி நடந்தது.
மருந்தியல் துறை சார்பில், ஆரோக்கியமான வாழ்க்கை மு றை, உடற்பயிற்சி பழக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனஅழுத்தக் குறைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, துறை தலைவர் பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார். உடற்கல்வி பயிற்சியாளர் சரவணா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மெதுவான சைக்கிள் போட்டி, வேக சைக்கிள் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உடற்தகுதி, ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவித்தன.
மேலும் இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளின் அவசியம், ஆரோக்கியமான வாழ்வியலைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பொதுமக்கள் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரையை முன்னிறுத் தும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. இதில், பல்வேறு சுகாதார அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து