திட்டமிடல் இல்லாததால் பாரதி சாலையில் பாலம் கட்டும் பணி... நிறுத்தம் :4 நாட்கள் மக்களின் கஷ்டத்திற்கு பிரயோஜனம் இல்லை
கடலுார் அண்ணா பாலம் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 22 கோடியே 15 லட்சம் ரூபாய்மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பாரதி சாலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் புதிதாக சிறிய கல்வெட்டு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கான கட்டுமான பணிகள் 14ம் தேதி துவங்கப்படும் என அறிவித்து,போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இதன் காரணமாக கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, சென்னை,விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அன்று இரவு முதல் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாகதிருப்பி விடப்பட்டன.
திருப்பாதிரிப்புலியூரில் இருந்து அண்ணா பாலத்தை கடந்தால் 200 மிட்டர் தொலைவில் புதுப்பாளையம் உள்ளது. ஆனால்புதுப்பாளையைம் செல்வதிற்கு காரில் செல்வோர் செம்மண்டலம், அரசு மருத்துவமனை, போஸ்ட் ஆபீஸ், உட்லண்ட்ஸ் ஓட்டல்,நியூசினிமா வழியாக புதுப்பாளையம் அடைய 5 கி.மீ., சுற்றி வர வேண்டும்.
இதனால் கடலுார் முழுவதும் கடந்த 5 நாட்களாக கடும்டிராஃபிக் ஜாம் ஏற்பட்டது.
இருப்பினும் நகரத்தின் வளர்ச்சிப்பணிகள் செய்யும் போது இது சகஜம் என மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
கட்டுமானப்பணிக்கு பள்ளம் தோண்டியபோது, அதில் ஏராளமான கேபிள் ஒயர்கள், குடிநீர் பைப் லைன்கள், பாதாள சாக்கடை திட்ட பைப் போன்றவை செல்கின்றன. இவற்றை உடைத்தால் தான் பாலம் கட்டுமானப்பணியை மேற்கொள்ளமுடியும்.
மேலும் கேபிள் ஒயர்கள் செல்லும் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இவற்றிக்கெல்லாம் அனுமதி பெறாமல் சுலபமாக கல்வெட்டு பாலம் கட்டி விடலாம் என அதிகாரிகளின் திட்டம் தகர்ந்தது.
கேபிள் ஒயர், குடிநீர் பைப் லைன் போன்றவை துண்டித்து சரி செய்வதற்கு பல மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், கல்வெட்டு பாலம் கட்டுமான பணியை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் நேற்று நிறுத்தினர்.
தற்போது தோண்டிய பள்ளத்தை படிப்படியாக மூடி அதன் வழியாக போக்குவரத்தை ஏற்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
கடந்த 4 நாட்கள் கஷ்டப்பட்டும் பலனில்லையே என மாநகர மக்களின் ஆதங்கமாக உள்ளது.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து