ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்

3

- நமது நிருபர் -

திருச்செந்துார் தொகுதியில் வென்ற தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசுகையில், 'காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐந்து பேரும் துரோகிகளாக மாறி விட்டனர். நாட்டில் காங்கிரசார் போல் துரோகிகள் யாரும் இல்லை. வரும் காலங்களில், தமிழகத்தில் இருந்து எம்.பி.,க்களை பெறலாம் என ராகுல் நினைத்தால், அது கனவிலும் நடக்காது. அவர் முகத்தில் தமிழக மக்கள் கரியை பூசுவர்' என விமர்சித்தார்.

இந்த பேச்சை கண்டித்து, காங்., -- எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை:


பதவி பறிபோன விரக்தியில் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கு உதாரணமே, அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு. தி.மு.க., தலைமையிடம் ஒரு கேள்வி, ராகுலையும், எங்கள் மூத்த தலைவர்களையும், தொடர்ந்து தரக்குறைவாக பேசும் அரசியலை, தி.மு.க., தலைமையே ஊக்குவிக்கிறதா? இல்லையெனில் உடனே கண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துாத்துக்குடி காங்., மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கூறுகையில், ''எங்கள் தலைவர்களை தொடர்ந்து அவதுாறு பேசினால், பொது இடத்திற்கு வரும்போது கருப்பு மையை வீசுவோம்,'' என்றார்.

Advertisement