ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் காரணமாக, திட்டமிடப்பட்ட தாக்குதலை ஒத்திவைத்து உள்ளேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜின்பிங் நமது ராணுவத்தைப் பெரிதும் பாராட்டினார். உலகின் மிகச்சிறந்த ராணுவம் நம்மிடமே உள்ளது. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில நாடுகளும் என்னைத் தொடர்புகொண்டன.
அவர்கள் தற்போது நமது தரப்பினருடனும், குறிப்பாக ஈரானுடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஒரு இணக்கமான தீர்வை எட்டக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, அதாவது ஒரு குறுகிய காலத்திற்கு, ஒத்திவைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.
ஈரானின் மீது குண்டுமழை பொழிந்து அவர்களைச் சின்னாபின்னமாக்காமலேயே, நம்மால் அந்தத் தீர்வை எட்ட முடிந்தால், நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஈரான் மீதான தாக்குதலை நான் சிறிது காலத்திற்கு ஒத்திவைத்து உள்ளேன்.
நாங்கள் ஈரானுடன் மிக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது ஒரு மிகவும் சாதகமான முன்னேற்றம், ஆனால் இது எதிலாவது முடிவடையுமா இல்லையா என்று பார்ப்போம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் பதிவு
முன்னதாக சமூக வலைதளத்தில் அதிபர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் மீது நாளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த எங்களது ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயத் அல் நஹ்யான் ஆகியோர் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏனெனில், தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன; மேலும், சிறந்த தலைவர்களாகவும் நட்பு நாடுகளாகவும் திகழும் அவர்களின் கணிப்பின்படி, அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகவும் சாதகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்த தலைவர்கள் மீது நான் கொண்டுள்ள மரியாதையின் அடிப்படையில், நாளை ஈரானின் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை நாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை என்று போர்ச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டேனியல் கெய்ன் மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதேவேளையில், ஒரு ஏற்புடைய ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், எந்த நேரத்திலும் ஈரானின் மீது முழுமையான மற்றும் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு நான் மேலதிகமாக உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அப்படி என்றால் நாளைய ஆரம்பமாகும்
மொத்தத்தில் குரங்கு கையில் பூமாலையை அமெரிக்க மக்கள் கொடுத்துவிட்டார்கள். உலகம் முழுவதும் அல்லல்படுகிறது . இவர் பெரிய தலைவலியாக உலகம் நினைக்கிறது .
உலக நாடுகள் அனைத்தும் இவரின் வாலை பிடித்து அலைகின்றன. உலகப்பொருளாதாரமோ இவரின் காலடியில் தவமிருக்கிறது
சண்டை போட திட்ட கொஞ்சம் கம்மியாயிடுத்து. உலக தாடுகளிலிருந்து வரி போட்டு சம்பதித்து பிறகு வர்ரோம். அதுவரையிலும் ஜூட் விட்டிருக்கேன். ஆமாம் சொல்லிபுட்டேன் மறுபடி தாக்கினால் உங்களை வரைபடத்திலிருந்தே நீக்கி விடுவேன( only எங்க குட்ட இருக்க வரைப்படத்திலுருந்துதான்)
மோடிஜிக்கு தெரியாமல் ரெண்டு தடவை பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி விட்டார்கள்.
வெளிநாட்டுக்கு போயிருக்கும் சமயம் பார்த்து ஏத்திப்புட்டாய்ங்க. ஜீக்க தெரிஞ்சா ஒடனே கொறைச்சிடுவாரு.
இஸ்லாமிய நாட்டோ இன்னமும் முழுமை பெறவில்லை டிரம்ப் , அதற்காக இந்த நேரம் கடத்துதல் இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதாவது அமெரிக்கர்களுக்கு நிம்மதியில்லாத இரவுகள் பகல்களை அளிப்பார்கள் வைரஸ்கள்
எல்லோரும் பங்கு சந்தையில் உடனே முதலீடு செய்வார்கள் உடனே அடுத்த வாரம் தாக்குதல் உடனே முதலீட்டாளர்கள் பெரும்பீதியுடன் வந்தவரை போதுமென வெளியேறும்போது ட்ரம்ப் அதிகாரவட்டம் சல்லிசான விலையில் பங்கு வர்த்தகத்தில் பெரும் முதலீடு செய்வார்கள் உடனே யுத்தம் நிறுத்திவைப்பு என்று இப்போது போல அறிக்கை விடுவார் ட்ரம்ப் வட்டம் கொள்ளை லாபத்தில் விற்று பெரும்பணம் ஈட்டுவார்கள் இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. நாடகம் நடத்துவனின் நடிப்பை தோலுரிக்க வேண்டும்.
எல்லோரும் பங்கு சந்தையில் உடனே முதலீடு செய்வார்கள் உடனே அடுத்த வாரம் தாக்குதல் உடனே முதலீட்டாளர்கள் பெரும்பீதியுடன் வந்தவரை போதுமென வெளியேறும்போது ட்ரம்ப் அதிகாரவட்டம் சல்லிசான விலையில் பங்கு வர்த்தகத்தில் பெரும் முதலீடு செய்வார்கள் உடனே யுத்தம் நிறுத்திவைப்பு என்று இப்போது போல அறிக்கை விடுவார் ட்ரம்ப் வட்டம் கொள்ளை லாபத்தில் விற்று பெரும்பணம் ஈட்டுவார்கள் இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. நாடகம் நடத்துவனின் நடிப்பை தோலுரிக்க வேண்டும்.
1971 இல் கருணாநிதி மதுவிலக்கை ஒத்திவைத்தார்.
ஒரு அமெரிக்க டாலர் ஒரு ரூபாய்க்கு கிடைக்குதாமே.
இவர் பேச்சில் இருந்து எல்லாமே இவர் கையில் தான் போல் தெரிகிறது.நாளை நடப்பதை நன்கு அறிந்தவர் போல் தான் பேச்சுமேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து