அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம்; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமை அலுவலத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகை தந்தார். அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குளறுபடிகளால், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவானது.
அந்த அணியில், 25 எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்ததோடு, த.வெ.க., அரசுக்கு பகிரங்க ஆதரவு அளித்துள்ளனர். மேலும், த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறவும் பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தேர்தல் தோல்விக்கு பின்னர் முதல் முறையாக தலைமை அலுவலத்திற்கு இபிஎஸ் வந்தார். அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு தரப்பினர் செயல்பட்டு வரும் நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து இபிஎஸ் ஆலோசனை செய்ய உள்ளார். இதனால் இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கு டி ...... கும்பல் வெளியேற்றபடனும்மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து