தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
சென்னை: சென்னையில் இன்று (மே 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து 14,870 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 16) ஆபரண தங்கம், கிராம் 14,750 ரூபாய்க்கும், சவரன் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை (மே 17), தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்றைய நிலவரம்
நேற்றும் (மே 18) தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு 10,000 அதிகரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மே 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து 14,870 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வீடியோ பார்க்க…
தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரனுக்கு எவ்ளோ கூடியது?
வீடியோ வாயிலாக தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
increment time high, lowest time low.. its formala is bussiness startigy