நெடுஞ்சாலை ஓரம் மரத்துண்டுகள் :வளைவில் விபத்து அபாயம்
ராஜபாளையம்: ராஜபாளையம் வழி தேசிய நெடுஞ்சாலை வளைவில் விபத்து ஏற்படும் விதமாக வெட்டிய மர துண்டுகளை அரசு மருத்துவமனை ஒட்டி மாதக்கணக்கில் அகற்றாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை கடந்த ஆட்சியை முடிவடையும் நிலையில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனை வளாகம் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்க இங்கு இருந்த வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டன.
இந்நிலையில் வெட்டிய மர துண்டுகளை நெடுஞ்சாலை வளைவில் விபத்து ஏற்படும் விதமாக போட்டு மாதக்கணக்கில் அகற்றாமல் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர.
திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை தற்போது குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் கேரள பயணிகளுடன் பிசியாக உள்ள ரோட்டில் அகற்றாமல் வைத்துள்ளது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!