பெண்கள் முன்னேற்றத்தின் திறவுகோல் தேனி நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரி பொதுச்செயலாளர் ஆனந்தவேல் தகவல்

தேனி:தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி பெண்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல் என தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரியின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு தரமான கல்வி, உறுதியான வேலைவாய்ப்பு, பாதுகாப்பான சூழலை வழங்குவதாகும். மாணவியரின் நலன், பாதுகாப்பு, தொழில்திறன்களை மேம்படுத்த திறமையான பேராசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கபடுகிறது. கடந்த கல்வி ஆண்டில் மாணவிகள் 25 பேர் பல்கலை தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். கல்லுாரி நுாலகத்தில் 28ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள், 118 இதழ்களுடன் செயல்படுகிறது. பேராசிரியர்களால் 422 ஆய்வு கட்டுரைகள், மாணவிகள் 761 ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். 11 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 60க்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் கல்லுாரியில் கடந்தாண்டு நடத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த அறிவு, திறன்களை வளர்த்துக்கொள்ள 28 மதிப்பு கூட்டப்பட்ட சான்றிதழ் படிப்புகள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசு வேலை போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. முதுகலை 2ம் ஆண்டு மாணவி ஜி.மீராஸ்ரீ தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உதவி மேலாளராக ஆண்டிற்கு ரூ.13.96 லட்சம் ஊதியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர வளாகத்தேர்வு மூலம் தனியார் நிறுவனங்களில் 2008 பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் 776 மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பெற்றோரை இழந்த மாணவிகள் உள்ளிட்டோருக்கு அரசு உதவித்தொகைகள் பெற்றுத்தரப்படுகிறது.

மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்த கலாசங்கமி விழா நடத்தப்படுகிறது. கல்லுாரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து கல்லுாரிக்கு வர பஸ் வசதி, மாணவிகள் வருகை பதிவேட்டினை வீட்டில் இருந்தே பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம். கல்லுாரி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார்.

Advertisement