முற்றுகை

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை அருகே குமிலங்குளம் மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

ஆர்.டி.ஓ., ஜான்சன் தேவ சகாயத்திடம் அளித்த மனு: எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சொந்தமான நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் தனிநபர் பெயர்களில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மயானத்தையும் வேறு ஒரு பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர். ஆய்வு நடத்தி நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் முற்றுகை நடந்தது.

Advertisement