குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு

புதுடில்லி: இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் பாஸ்போர்ட் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு 2009ம் ஆண்டு குடியுரிமை விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், அந்தந்த நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், குடியுரிமை விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட 15 நாட்களுக்குள், தங்களின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அல்லது கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 'மின்-ஓசிஐ' எனப்படும் டிஜிட்டல் அட்டைகளை பெறுவதற்கான முழு ஆன்லைன் விண்ணப்ப முறைகள் இந்த மாதத் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement