செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமில்லால், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, பல மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காரணத்தினால், செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல தமிழக அரசின் அனுமதி தேவைப்பட்டது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சியமைந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக்கோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தேவையான ஆதாரங்கள், ரகசிய தகவல்கள் மற்றும் புகார் ஆவணங்களை தமிழக தலைமை செயலருக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (27)
JeevaKiran - COONOOR,இந்தியா
19 மே,2026 - 18:29 Report Abuse
CBI , INCOMETAX, ED போன்றவைகளுக்கு பிரதம மந்திரி முதல் கடைநிலை ஊழியர் வரை அவர்கள் பதவியில் இருக்கும்போதே விசாரிக்க்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்கணும். அப்போதான் ஊழல்கள் குறையும். ஆனால் முப்பது என்ன? நாம் தான் ஆட்சில் இருக்கிறோமே நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தினாலும் கர்வத்தினாலும் தான் ஊழலே நடக்கிறது 0
0
Reply
JeevaKiran - COONOOR,இந்தியா
19 மே,2026 - 17:58 Report Abuse
ஜனாதிபதிக்கு ஒரு சின்ன விண்ணப்பம். CBI , ED, INCOME TAX , MILITARY, சிபிஐ , அமலாக்க துறை, வருமான வரி , மிலிட்டரி இவர்களுக்கு எந்த மாநினலத்திலும் விசாரணை நடத்த எந்த முன் அனுமதியும் தேவை இல்லை என்று சட்டத்தை மாற்றியமைக்கணும். 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
19 மே,2026 - 17:35 Report Abuse
ஊழல்களை விசாரிக்க எதற்கு அனுமதி ?ஊழல்களில் எந்தவிதமான அனுமதியுமின்றி விசாரணை அமைப்புகள் விசாரிக்கும்படி சட்டமியற்றவேணுடும் .விசாரிக்கும்போது தனிமனித உரிமையையும் ,அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை கடைபிடிக்கும் நடைமுறையை கட்டமைக்கவேண்டும் .விசாரணையின் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும் .அப்போதுதான் ஊழல்களை குறைய வாய்ப்பு . 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
19 மே,2026 - 15:53 Report Abuse
இந்த திமுக பினாமி அரசு கண்டிப்பாக அனுமதி கொடுக்காது 0
0
Reply
தேவதாஸ் புனே - ,
19 மே,2026 - 15:14 Report Abuse
அரசு அனுமதிக்கனும்....... 0
0
Reply
மோகனசுந்தரம் - ,
19 மே,2026 - 15:10 Report Abuse
ஏண்டா என்னத்துக்காக இன்னும் விசாரணை. உண்மையில் நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றால் எப்பொழுது தண்டித்திருக்கலாம். சும்மா இப்படி விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். இவரிடம் அனுமதி அவரிடம் அனுமதி என்று எதற்கு இந்த நாடகம். சிபிஐ இடி எல்லாம் வெளி வேஷம். நாங்கள் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று கூறிவிட்டுப் போகவும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
19 மே,2026 - 14:45 Report Abuse
மமதா கட்சி 20000 தகுதியற்ற ஆசிரிய விண்ணப்பதாரர்களிடம் கட்டிங் பெற்று நியமித்தது. அந்த நியமனங்கள் செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் TMC ஆட்சி அவர்களை பதவியில் நீடிக்க விட்டது. செந்தில் பாலாஜி 2000 கும் குறைவான நியமனங்கள்தான் செய்துள்ளார். சிறிய கேஸ் என்பதனால் மன்னிக்கப்படும்? ஆட்சியே யாருடைய தயவில் தொங்குகிறது ?. 0
0
Reply
Venkatesan Ramasamay - ,இந்தியா
19 மே,2026 - 14:38 Report Abuse
YES,..
PERMISSION GRANTED ...
YOU CAN PROCEED...
DO IT IMMEDIATELY ... 0
0
Reply
GMM - KA,இந்தியா
19 மே,2026 - 14:30 Report Abuse
விசாரணை நடத்த மாநில நிர்வாக அனுமதி, வழக்கு தொடர்பாக நீதிமன்ற அனுமதி.. .. போன்ற அனுமதி, உத்தரவு பெற்று செயல்பட அமுலாக்க துறை ஒன்றும் கிளார்க் கிடையாது. சம்பளம் வழங்கும் அதிகாரி மற்றும் கலெக்டர் போன்ற அமலாக்க அதிகாரிகள் தன் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்க யார் அனுமதியும் தேவையில்லை. இப்படி பயந்து, பணிந்து அமுலாக்க துறை செயல் இழந்து வேலை செய்வதை விட, படுத்து உறங்கலாம். தமிழக மாநில அரசு மற்றும் சிவில் நீதிமன்றம் அமுலாக்க அமைப்பு கிடையாது. பரிந்துரை, தீர்வு தான் காண வேண்டும். இவர்களிடம் முன் அனுமதி பெறுவது தவறு. முன் அனுமதி விதி, அரசாணை இருந்தால் அது சட்ட விரோதம்? 0
0
Reply
Siva - ,இந்தியா
19 மே,2026 - 14:27 Report Abuse
த்வக் reply:சாகும்வரை வச்சு செய்யவும் தடையற்ற அனுமதி வழங்கப்படுகிறது 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement