அ.இ.கூடைப்பந்து போட்டி இந்திய விமானப்படை வெற்றி
பெரியகுளம், மே 20-
பெரியகுளத்தில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதுடில்லி இந்திய விமானப்படை, திருவனந்தபுரம் போலீஸ் அணியை 84:62 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நேற்று முன்தினம் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெங்களூரு கஸ்டம்ஸ் ஜிஎஸ்டி அணியும் மோதியது. இதில் இரு அணி வீரர்களும் சம பலத்தில் மூன்று சுற்று வரை சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் 4 ம் சுற்றில் இந்தியன் வங்கி அணி 78:66 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. புதுடில்லி ஓ.என்.ஜி.ஸி., அணியும், லோனாவாலா இந்திய கப்பற்படை அணியும் மோதியது. இதில் ஓ.என்.ஜி.ஸி., அணி 98:80 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை விளையாட்டு விடுதி அணியும், புதுடில்லி இந்திய தரைப்படை அணியும் மோதியது. விளையாட்டு விடுதி அணி 87:79 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. விறுவிறுப்பான நான்காம் போட்டியில் புதுடில்லி இந்திய விமானப்படை அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும்
மோதியது. விமானப்படை அணி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் தங்களது ஆளுமை திறனை கையாண்டு எதிரணியை திணறடித்தனர். இறுதியில் விமானப்படை அணி 84:62 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நாளை (மே 21) நிறைவு நாள் போட்டி நடக்கிறது.
--