தனியார் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஊட்டியில் ஆய்வு
ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் , வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், அதிகமான தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் நிலை குறித்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னலையில் நேற்று ஆய்வு நடந்தது.
அதில், மலை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அனைத்திலும், 35 கி.மீ., வேகத்துக்குள் செல்லும் அளவிற்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளாத என ஆய்வு செய்யப்பட்டது. அதில், எஸ்.பி., நிஷா, வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர், வாகன ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று மட்டும், 169 வாகனங்கள் ஆய்வு செய்யப்ட்டன. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement