எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்

48


சென்னை: எங்கள் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களுக்கு ராஜ்மோகன் அளித்த பேட்டி: நாளை (மே 20) காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மத்திய அரசு கல்விக்கான நிதியை 2 ஆண்டுகளாக தரவில்லை; இது ஏற்றுக்கொள்ள முடியாதது; எந்த மறைமுக அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிபவர்கள் அல்ல. எங்கள் கொள்கையில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.


பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பில் குறைப்பாடுகள் இருந்தால் சமரசம் இல்லாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம். ஆசிரியர்களின் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பொது நலனில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்தார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி; தினமலர் நேரலை ஒளிபரப்பு

லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement