குன்றத்து கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் நேற்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று மாலையில் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பி, மேடையில் அமைத்திருந்த ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது.

இந்நிகழ்ச்சி மே 29 வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 30 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை பால் அபிஷேகம் செய்யப்படும்.

மே 31 காலையில் சுவாமி, தெய்வானை தங்கக் குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர். பின்னர் மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.

Advertisement