பறிமுதல் செய்யப்பட்ட ரூ.43 லட்சம்உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

திருவாடானை: திருவாடானை தொகுதி தேர்தல் களத்தில் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யபட்ட ரூ.43 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டதை தொடர்ந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய சந்திப்புகள், சோதனை சாவடிகள் மற்றும் கிராம புற எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உரிய ஆவணங்கள் இன்றி காரிலும், டூவீலர்களிலும் கொண்டு செல்லபட்ட ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யபட்டு வருவாய்த்துறையினர் மூலமாக திருவாடானை சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து திருவாடானை வருவாய்த்துறையினர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.43 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கருவூலம் மூலம் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றனர்.  

Advertisement