புதுச்சேரியில் அரசு தகவல்: அதிகாரிகளுக்கு தகவல் உரிமை சட்ட பயிற்சி முகாம்

புதுச்சேரி: தகவல் உரிமை சட்டம் குறித்து புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை சார்பில், அரசு தகவல் தரும் அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் தணிக்கை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம், ஓட்டல் அண்ணாமலை இன்டர்நேஷனல், தர்பார் ஹாலில் நடந்தது.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளைத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். புதுச்சேரி கிளையின் கவுரவ செயலாளர் நரசிம்மமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் பேசுகையில், 'பொதுமக்களுக்கு அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்ட நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு அரசு தகவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பயன்படுத்திப் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அமர்வுகளில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பேராசிரியர் சுரேஷ் வெளிப்படைத்தன்மையையும் ஆளுமையையும் பற்றியும், ஓய்வு பெற்ற பி.சி.எஸ்., அதிகாரி முரளிதரன், உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்புகளின் பற்றி விவரித்தார். முனைவர் பிரேமா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினவ் அரசியல்மைப்பு பரிமாணங்கள், ஆவண மேலாண்மை, அதன் கீழ் வெளிவரும் தகவல் வெளியீடுகள் குறித்துப் பயிற்சியளித்தார். சட்ட உதவி பேராசிரியர் பாலமுரளி தகவல் வெளியீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்.

நிறைவு விழாவில், வக்கீல் மோகன்தாஸ் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இந்திய பொதுநிர்வாக நிறுவனத்தின் பயிற்சி மேம்பாட்டு மையம் நோடல் அலுவலர் ஜெயவிஜயன் நன்றி கூறினார்.

Advertisement