பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம்: சிவி சண்முகம், வேலுமணி தரப்பு அறிவிப்பு
சென்னை: பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம் என சிவி சண்முகம், வேலுமணி தரப்பு தெரிவித்து உள்ளது.
சென்னையில் சிவி சண்முகம், வேலுமணி தரப்பு நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தது. அப்போது சிவி சண்முகம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது முதல் தோல்வி அல்ல; 2019ல் இருந்து தொடர் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக ஓட்டு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
தவெக, கூட்டணி வைக்க முன்வந்தது. ஆனால் இபிஎஸ் உதாசீனப்படுத்தினார். தேமுதிக, புதிய தமிழகம் என யாரையும் அரவணைக்காமல் சென்றார் இபிஎஸ். அவர் நியமித்துள்ள புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது. இபிஎஸ் யாரையும் அரவணைக்கவில்லை. நாங்கள் தவறு செய்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அதில் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.
பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம். பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அதில் நாங்கள் பேசுவதற்கு தயாராக உள்ளோம். இப்போது தனது பொறுப்புக்கு பாதிப்பு வருவதால் பிரிந்து சென்றவர்களை ஏற்று கொள்வதாக கூறுகிறார்; முன்னதாகவே செய்திருந்தால் இபிஎஸ் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்.
அதிமுகவை மீட்டெடுப்பது தான் எங்களது ஒரே குறிக்கோள். பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நிர்வாகிளை மிரட்டினால் கட்சி எப்படி வளரும்; கட்சியின் விதிகளை இபிஎஸ் மீறுகிறார். இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.
வாசகர் கருத்து (11)
AaaAaaEee - Telaviv,இந்தியா
19 மே,2026 - 19:30 Report Abuse
அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
19 மே,2026 - 18:22 Report Abuse
கொள்ளையடித்ததை காப்பாற்றவே இவர்கள் துடிக்கிறார்கள். ரெண்டு பக்கமும் அடி விழுமே. தவெக வுக்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால் விஜய் ஊழல் வழக்கு போடுவார். ஆதரவு கொடுத்தால் பாஜக வழக்கு போடும். 0
0
Reply
nagendhiran - puducherry,இந்தியா
19 மே,2026 - 17:46 Report Abuse
கூட்டணி தர்மத்தை மீரி? தாவேகாவிற்கு வாக்கு"போட்டவர்கள் இதை பேசலாமா? 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19 மே,2026 - 17:12 Report Abuse
வேலுமணி மற்றும் சிவி.ஷண்முகம் இரண்டுபேரும் அமைச்சர் பதவிக்காக தவக கட்சியில் விலைபோன நவீன எட்டப்பன்கள். அதிமுக அழிவில் இவர்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும், விடுதலை புலிகளை காட்டிக்கொடுத்த கருணா போல 0
0
Reply
Ramaswamy Jayaraman - ,இந்தியா
19 மே,2026 - 16:03 Report Abuse
என்னடா நடக்குது இங்க என்று வடிவேல் சிரிப்பு நினைவுக்கு வருகிறது. 0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
19 மே,2026 - 15:21 Report Abuse
நிக்கிறவன் பூராம் திருடனைகளை போலவே இருக்கின்றார்கள் ...பொதுக்குழு அனைத்தும் EPS கண்ட்ரோல் பின்னே என்ன பொளக்கப்போறாங்க ? 0
0
Reply
சூர்யா - ,
19 மே,2026 - 15:16 Report Abuse
விஜய் இதுவரை அ.தி.மு.க என்ற வார்த்தையையே தன் வாயால் சொன்னதில்லை? மற்றும் பலர் என அ.தி.மு.கவை சொல்லி தொடர்ந்து அ.தி.மு.கவை சிறுமைப் படுத்தி வருகிறார். அவர் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முன் வந்தாரா? யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? யாரையும் கேட்காமல் வெறும் பதவி ஆசைக்காக உங்களது தலைமையில் 25 பேர் அழையா விருந்தாளியாக சென்று த.வெ.கவிற்கு சட்டசபையில் ஆதரவு அளித்தீர்கள். இன்று அதை நியாயப் படுத்த ஏதேதோ சொல்லுகிறீர்கள். பொதுக் குழு முடிவைக் கேட்டுத்தான் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை நீங்கள் எடுத்தீர்களா? 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
19 மே,2026 - 15:15 Report Abuse
தவெக அதிமுக கூட்டணி தோல்வி அடைந்து இருக்கும்.இருக் கழகங்களுக்கும் மாற்று என்ற முறையில் தான் திமுக அதிமுக ஓட்டுக்களும் தவெகவுக்கு விழுந்துள்ளது. 25 பேர் ஆதரவு தந்தது தவறானது. 0
0
Reply
Govi - ,
19 மே,2026 - 15:06 Report Abuse
சதிகார கும்பல்
நீக்க படனும் 0
0
Reply
சந்துரு - ,
19 மே,2026 - 15:03 Report Abuse
பொதுக்குழு கூட்டி, பொதுக்குழு முடிவைக் கேட்டுத்தான் சட்ட சபையில் த.வெ.கவிற்கு முட்டுக் கொடுத்தீர்களா? 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement