தெரு நாய்கள் 30க்கு தடுப்பூசி
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியப் பகுதியில் தெரு நாய் ஒன்று 8 பேரை கடித்ததையடுத்து கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்கள் 30க்கு நேற்று தடுப்பூசி போட்டனர்.
கடம்பத்துார் ஒன்றியம், கல்லம்பேடு ஊராட்சி, பூவனுார் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8 பேரை தெரு நாய் கடித்தது. அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதேபோல கடம்பத்துார் ஒன்றியத்தில் மேல்நல்லாத்துார், வெங்கதுார் ஊராட்சியிலும் தெரு நாய்கள் தொல்லை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, நடராஜன் ஆகியோர் உத்தரவின்படி, நேற்று, கடம்பத்துார் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி மருத்துவர் சிவசங்கர் மற்றும் ஊழியர்கள், வெங்கத்துாரில் 20, மேல்நல்லாத்துாரில் 10 என, மொத்தம் தெரு நாய்கள் 30க்கு தடுப்பூசி போட்டனர்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து