காஞ்சிபுரத்தில் வரும் 22ல் வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை மறுதினம், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம், காலை 9:30 மணி அளவில் நடக்கும் முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்கானல் நடத்த உள்ளனர்.

இதில், 18 - 35 வயது வரை இருக்கும், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கு பெறலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, 044 -27237124 என்ற தொலைபேசி எண்ணில், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement