ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு விருத்தாசலம் பஸ் நிலைய நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளதால், பயணிகள் வெயிலில் கடுமையாக பாதிக்கின்றனர்.

- ராஜ்குமார், விருத்தாசலம்.

-

சாலையில் கழிவுநீர் நடுவீரப்பட்டு அடுத்த ராணிப்பேட்டையில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.

ரமேஷ், நடுவீரப்பட்டு

-

சிக்னல் இயக்கப்படுமா விருத்தாசலம் நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவக்குமார், விருத்தாசலம்.

-

சீரமைக்கப்படுமா விருத்தாசலம் பெரியார் நகர் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள், விருத்தாசலம்.

-



குரங்குகள் தொல்லை புவனகிரி பகுதியில் அதிகரித்து வரும் குரங்கு தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தட்சிணாமூர்த்தி, புவனகிரி.



-

பேனர்களால் விபத்து மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் வாகன ஒட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குருநாதன், மந்தாரக்குப்பம்.

Advertisement