வண்டல் மண் அள்ள அனுமதி: விவசாய சங்கம் வலியறுத்தல்

கோவை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை: தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ச்சியாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் நிலத்தின் உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை சரி செய்ய இயற்கை உரமான அணைகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள வண்டல் மண் மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணைகளிலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.

விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீண்டும் மழை பெய்து தண்ணீர் வந்து விட்டால் வண்டல் மண் எடுப்பதற்கு வாய்ப்பில்லை.

கடந்த காலங்களில் இதே பருவத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு நீர்வள ஆதாரத்துறைக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்காமல்

கடந்த காலங்களை போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய நீர்நிலைகள், அணைகள், குளங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்பு வண்டல் மண் அள்ளுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

Advertisement