டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்துபட்டியில் ரோட்டோரத்தில் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்துப்பட்டி ஆதிதிராவிடர் காலனி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் இருந்து அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மரின் இரு மின்கம்பங்களும் முற்றிலும் சேதமாகி உள்ளது. அடி முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. பெரிய காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது.

மேலும் அப்பகுதியில் நடமாடுகிற ஆடு, மாடு போன்ற கால்நடை உரசினாலே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. தவிர பள்ளி மாணவர்களும் இதனை கடந்து தான் வருகின்றனர். மக்கள் நடமாடும் போது டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.

Advertisement